சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தினை ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கியுள்ளார். பேட்ட, ஜிகிர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை அவர் ஷங்கரிடம் கொடுத்து இதனை உங்ளுடைய ஸ்டைலில் படமாக எடுங்கள் என கூறியவுடன் ஷங்கர் தன்னுடைய ஸ்டைலில் படத்தினை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், படம் ஷங்கர் படம் […]