தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று 596 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.குறிப்பாக,சென்னையில் மட்டும் 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,கொரோனா தொற்று அதிகரித்து மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்,தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில்,சென்னை தனியார் மருத்துவமனைகள்,சிகிச்சை மையங்கள் & […]
சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வீட்டு தனிமையில் இருக்க கூடிய நபர்களை கண்காணிக்க மருத்துவ படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் 300 மாணவர்களை மாநகராட்சி சார்பாக நியமனம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 135 மாணவர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். நாளை முதல் மருத்துவர்கள் வீட்டு […]
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய வேளாண்துறை செயலாளராக பணியாற்றி வந்த ககன் தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்ட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மதுரை மாநகராட்சி ஆணையராகவும் பணியறியுள்ளார். மேலும் ஊரக வளர்ச்சி துறையிலும் ககன் தீப் சிங் பேடி மிகுந்த அனுபவம் […]