சென்னையில் தினசரி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் தினசரி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகளின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதற்கட்ட உடற்பரிசோதனை செய்ய 11 மையங்கள் இயங்கிவரும் நிலையில், நாளை முதல் 15 மையங்கள் செயல்பட உள்ளன. இதனால், சென்னையில் நாள்தோறும் 22,000 RTPCR பரிசோதனைகளை […]
லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர் முன்னாள் போலீஸ்காரர் என பஞ்சாப் டிஜிபி தகவல். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நேற்று 3வது தளத்தில் உள்ள கழிவறையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்துள்ளாதாகவும் தகவல் கூறப்பட்டது. லூதியானா நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் […]