ஜப்பானில் உள்ள ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், முதல் முறையாக பறக்கும் கார் ஒன்றை உருவாக்கி, அதனை பறக்கவிடப்பட்ட சோதனையில் வெற்றிபெற்றது. சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு குறைக்கவும், அதற்கு மாற்றுத் தீர்வு காணவும், போக்குவரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும், உலக நாடுகள் பல பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், பறக்கும் கார் ஒன்றை உருவாகியுள்ளது. அதற்கு எஸ்.டி- 03 என பெயரிட்டனர். […]