தமிழ்நாட்டை சேர்ந்த / தமிழ் வம்சாவளியை சேர்ந்த பட்டியலினத்தவர்களால் இந்தியாவுக்குள் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதியுதவி பெற www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பங்குகள், பங்குதாரர்கள் என்று அனைவரும் SC/ST வகுப்பினராக இருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த ஹவில்தார் திருமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமூர்த்தி 173வது படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூலை 26-ம் தேதி அன்று இந்திய எல்லையில் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜூலை 31-ம் தேதி சிகிச்சை […]
தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். சிஆர்பிஎப் வீரர் சந்திர சேகர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் சந்திர சேகர் வீரமரணமடைந்தார். மேலும் சந்திர சேகரின் குடும்பத்திற்கு நேரில் ஆதரவு கூறவும், அரசு சார்பில் மரியாதையை செலுத்தவும் […]