புத்தாண்டு தினத்தன்று ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். ஜப்பான் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு மேல் 30க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில், குறிப்பாக 7.6 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது என அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே சுமார் 15 கிமீ […]
ஜப்பானில் மேற்கு பகுதிகளில் இன்று பிற்பகல் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் சுமார் 30 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. இதில், 7.6 ரிக்டர் அளவு வரை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற […]
ஜப்பானில் ஆளும் கட்சி தலைமைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,ஜப்பானின் அடுத்த பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்கிறார். ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் கட்சி தலைமை தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்.அதன்படி,கிஷிடா திங்களன்று ஜப்பான் பாராளுமன்றத்தில் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை இந்த வெற்றியின் மூலம் […]