சென்னையில் 47வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 47-வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் […]