ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைத்தது வருத்தமளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனோ தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு உயிரிழந்த 28 முன் கள பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 […]