சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி விளையாடுவர் என தெரியவந்துள்ளது. அர்ஜன்டினா கால்பந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மெஸ்ஸி தற்போது வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரில் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்க்கு முன்னர் அர்ஜென்டினா அணியில் சில நட்புரீதியான போட்டிகளையும் விளையாடுவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. […]