புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாக ரூ.7 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2016 முதல் 2020 வரை அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 480 வீடுகள் கட்டியதாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 480 வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ரூ.7 கோடி வரை பணம் தந்து மோசடி செய்ததாக 25 அரசு ஊழியர்கள் […]