சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1870 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள விக்ரம்பூரில் பிறந்தவர் தான் சித்தரஞ்சன் தாஸ். தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், அரசியலில் அதிக தீவிரம் காட்டியவர். மேலும் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த இவரை சுபாஷ் சந்திரபோஸ் தனது அரசியல் குரு என போற்றியுள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் […]
சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1907 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் பிறந்தவர் தான் துர்காவதி தேவி. இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பகவதி சரண் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் செயல் துடிப்போடு விடுதலை போராட்ட வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். தன் கணவருடன் இணைந்து தங்களுக்கு கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்டத்துக்காக செலவழித்த இவர் லாலா […]
சுதந்திர போராட்ட வீரர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1904 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பிறந்தவர் தான் திருப்பூர் குமரன். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், கொடிகாத்த குமரன் என அழைக்கப்படும் இவர் இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்துள்ளார். திருப்பூரில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்ட திருப்பூர் குமரன் பல போராட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார். அதன் பின் 1932 ஆம் ஆண்டு காந்தியடிகளின் […]
விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1906 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு எனும் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் எனும் இடத்தில் பிறந்தவர் தான் மா பொ சிவஞானம். இவர் சிறந்த தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மா பொ சி என அறியப்படும் இவர், சிலப்பதிகாரத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் மற்றும் ஆளுமை காரணமாக சிலம்புச் செல்வர் எனவும் […]
விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பங்கா என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் பகத்சிங். இவர் சிறு வயதிலேயே கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் என அடிக்கடி கூறுவாராம். அவருக்கு 12 வயது இருக்கும் பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. மேலும், 1928-ம் ஆண்டு சைமன் குழு இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் […]
சுதந்திரப் போராட்ட வீரர் வினோபா பாவே பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கைக்கோடா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் வினோபாபாவே. இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத்தின் தந்தையும் ஆவார். இவர் மகாராஷ்டிரா தர்மா எனும் மாத இதழை 1903 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். கதராடை, கிராமத்தில் தீண்டாமை, கிராம மக்களின் கல்வி, சுதந்திரம், மேம்பாடு ஆகியவற்றிற்கு பாடுபட்டவர். பூதான் எனும் […]
சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பிறந்தவர் தான் இந்திய சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி. இவர் 1943ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரப் போராட்ட போராளியாக 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பும் தொடர்ந்து சமூக ஆர்வலராக பணியாற்றிவந்த எச்.எஸ்.துரைசாமி அவர்களுக்கு கடந்த மே 8-ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
இக்காலம் மட்டுமில்லாமல் எக்காலமும் இளைஞர்களின் மனதில் உறுதியுடன் வாழும் நட்சத்திரமான மாவீரன் பகத்சிங்_ கின் ஒளி வீசும் பொன் மொழிகள் “எதிலும் குருட்டு நம்பிக்கை ஆபத்தானது .அது மனிதனின் மூளையை முடமாக்கி அவனை பிற்போக்கில் தள்ளி விடும்’ “ஓர் புரட்சி கட்சிக்கு ஊர் உறுதியான திட்டம் தேவை, புரட்சி என்றாலே செயல்தான்.திட்டமிட்ட நடவடிக்கை மூலம் மாற்றங்களை கொண்டு வருவதுதான் புரட்சி ஆகும்.திட்டமிடாது ஏதும் நடந்துவிடாது” “நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன் ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் […]
இன்றைய சமூக சூழ்நிலையில் இந்த மண்ணுக்காக முற்றாக தன்னை அர்பணித்துக் கொண்ட மகத்தான மனிதர்களை சிந்திப்பதற்கு கூட நமக்கு நேரமில்லாமல் போய் விட்டது.நம் வாழ்வை வளப்படுத்துவதற்க்காக , நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக நாம் ஜனநாயக உரிமைகளை பெறுவதற்காக நமக்கு எழுத்து சுதந்திரம் , கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நினைத்தால் ஒரு அரசை மாற்றும் சுதந்திரம் யாரை நினைக்கிறோமோ அவர்களை அரியாசனத்தில் ஏற்றும் சுதந்திரம் இப்படி எல்லா சுதந்திரமும் பெறுவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ […]
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஒடிசா மாநில முதல்வராக இரு முறை பதவி வகித்தவருமான பிஜு பட்நாயக் நினைவாக சிறப்பு தபால்தலையை இந்திய அஞ்சல்துறை நேற்று அவருடைய பிறந்த தினத்தில் வெளியிட்டது. ஒடிஸா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய அஞ்சல் துறை செயலாளர் தபால்தலையை வெளியிட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெற்றுக் கொண்டார்.
இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949) சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் – மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது 1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 […]
இன்று ஜனவரி 28ம் நாள் இந்தியாவின் விடுதலைக்காகவும் சமூக, சமயப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்ட பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த நாள்.(1865) பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தார். முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என்று முழங்கினார். பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது. 6 மாதங்களில் விடுதலையானார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். […]