இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், துளிர்க்கும் நம்பிக்கை என்ற தலைப்பில் பிரபல தொலைக்காட்சி மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் விழா காலங்களில் தொற்று அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என தெரிவித்தார். மேலும், கொரோனவால் இழந்த மாநிலத்தின் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]