சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கபடுகிறது என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 40 பணிமனை – பேருந்து நிலையங்களில் ஜூலை 31 வரை இலவச டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இலவச டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. […]