சென்னையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் ஒன்பது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 5.45 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கும்போது முதல்வருடன், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.