டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்கு,வாழ்நாள் முழுவதும் இலவச பீஸ்ஸா வழங்குவதாக டோமினோஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில்,பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி,நேற்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஸ்னாட்ச், கிளீன் மற்றும் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் (87 கிலோ + 115 கிலோ) […]