பெண் ஒருவரை அனைவரது துணிகளையும் துவைக்க சொல்லிய நபருக்கு, 2000 பெண்களுக்கு 6 மாதம் இலவசமாக துணி துவைத்து கொடுக்க வேண்டும் என பீகார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பீகாரில் உள்ள மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜஞ்சர்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு பெண்ணை அனைவரது துணிகளையும் துவைக்க சொல்லி துன்புறுத்தியதாகவும், அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இந்த பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]