விவசாய இணைப்புகளில் தமிழக அரசு மேற்கொள்ளும் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்,அதிமுக செய்தால் அது “ரத்தம்” திமுக மேற்கொண்டால் “தக்காளி சட்னியா”? என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு,மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் முதன் முதலாக […]
இலவச மின்சாரம் பெற 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிருஷ்ணகிரி பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்க கூடாது என்பது அரசு தனியார் என இரண்டு துறை அலுவலர்களுக்கும் விதிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலமங்கலத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக வெங்கடேசன் என்பவரிடம் 10,000 ரூபாயை லஞ்சமாக பெற்ற தென்னரசு எனும் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஏற்கெனவே இருக்கும் மின்சார திட்டத்தை திருத்தி புதிய மின்சார திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய மின்சாரம் திட்டம் வந்தால் விவசாயிகளின் இலவச மின்சார திட்டம் மற்றும் ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த […]