அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கேரளாவில் இன்று 1000பேருக்கு இலவச பிரியாணி அறிவித்த ஹோட்டல். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில், பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜென்டினாவின் இந்த வெற்றியை முன்னிட்டு உலகெங்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் ரசிகர்கள் அர்ஜென்டினா வெற்றியை பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவின் திரிசூரில் உள்ள ராக்லாண்ட் ஹோட்டல் இன்று (திங்கள் கிழமை) 1000 பேருக்கு இலவச பிரியாணி வழங்குவதாக அறிவித்துளளது.