விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அதிகாரிகள்… நெல் கொள்முதலில் மிகப்பெரிய மோசடி…

அரசு விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்துவருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கொள்முதல் கிடங்கிற்கு கொண்டு சென்ற நெல் மூட்டைகளை மீண்டும் கொண்டு வந்து கொள்முதல் செய்தது போல் கணக்கு காட்டி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில்,  கண்ணாரபேட்டை கொள்முதல் நிலையத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 155 நெல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ₹.40 லஞ்சம் பெறுவதாக வந்த புகாரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

Exit mobile version