பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார்….!
திரைப்பட பாடலாசிரியரும்,கவிஞருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கவிஞர் பிரான்சிஸ் கிருபா தமிழ் இலக்கியத்தின் நவீன கவிதை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவரின் மல்லிகைக் கிழமைகள், ஏழு வால்நட்சத்திரம், நிழலின்றி ஏதும் அற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் என்ற கவிதைப் படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த கிருபா,வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம் ,குரங்கு […]