பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாரணாசியில் கங்கை ஆற்றில் படகுப் பயணம் மேற்கொண்டார். 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து 100 மெகாவாட் திறன்கொண்ட சூரியமின்னுற்பத்தி பூங்காவை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வாரணாசி திரும்பிய தலைவர்கள் இருவரும் அங்குள்ள தீன்தயாள் உபாத்யாய் கைவினைப் பூங்காவை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து கங்கைக்கரையில் புகழ் […]
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் கல்வி பயில ஃபிரான்சுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள பைகானீர் (Bikaner) இல்லத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்தியா வரும் பிரான்ஸ் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். உலகம் டிஜிட்டல் புரட்சிக்கும் பருவநிலை மாறுபாட்டுக்கும் மத்தியில் இருப்பதாகக் கூறிய மேக்ரான், மாறுபட்ட சிந்தனைகளும் செயல் வேகமும் அவசியம் என்றார். தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் எளிமைப்படுத்தப்படவேண்டும் என்றும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருப்போரின் […]
குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியா வந்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மனைவி பிரிகிட் மேரி கிளாட் (Brigitt Marie Claude) மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் 4 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று கட்டி அணைத்து வரவேற்றார். தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் இமானுவல் மேக்ரான் மற்றும் பிரிகிட் மேரி […]
இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வந்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நான்கு நாள் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரன் இந்தியா வந்துள்ளார். மனைவி பிரிஜட் மேரி கிளாடி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவுடன் நேற்று இரவு டெல்லி வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், கடலோர பாதுகாப்பு, தீவிரவாத […]
4 நாள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வரும் 9ம் தேதி இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது. வரும் 9ம் தேதி தனது மனைவி ப்ரிக்ட்டே மரி கிளைடே (Brigitte Marie-Claude உடன் இந்தியா வரும் மேக்ரன், 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். பொருளாதாரம், சர்வதேச அரசியல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மகாராஷ்ட்ராவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் […]