திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் பூக்க துவங்கிய பட்டாடி என்ற ஆப்ரிக்கன் துலிப் மலர்கள் தற்போது மரம் முழுவதும் பூத்து குலுங்க பார்ப்பவர்களின் கண்ணை சிலிர்க்க வைக்கிறது. ஆங்கிலேயர்களால் அலங்காரம் மற்றும் அழகிற்காக நடப்பட்ட இந்த மரங்களின் பூக்களில் தேனை குடிக்க வரும் தேனீக்களை கொல்லுமாம். எனவே, இந்த மரங்கள் இயற்கைக்கு உகந்தது அல்ல என்றும், மண்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் என்பதால் இதுபோன்ற மரங்களை அப்புறப்படுத்த கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.