அலோபதி மருத்துவ முறை குறித்து தவறான கருத்து தெரிவித்ததால், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனத்தின் உரிமையாளரான பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை குணப்படுத்த ஆங்கில மருத்துவம்,சித்தா உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,பாபா ராம்தேவ் சமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து காணொளி ஒன்றில் தவறாக பேசியுள்ளார். அதில்,பாபா ராம்தேவ் கூறியிருப்பதாவது,”அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல்,அதனால்,இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையில் ஆக்சிஜன் கிடைக்காமல் […]
நிதி நெருக்கடியிலும், பண மோசடிலும் சிக்கி தவிக்கும் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கீழ் கொண்டுவந்தது ரிசர்வ் வங்கி. இதையடுத்து வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சர் உறுதியளித்தார். இதனிடையே யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீது பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர், […]
கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்த அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவால் காலமானார். கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் என்ற செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக 74வது வயதில் காலமானார். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்டுபிடிப்பைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களில் (Ctrl+C) மற்றும் (Ctrl+V) ஆகிய ஷார்ட்கட் கீ யை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. […]
லண்டன் நீதிமன்றம், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்ட் தற்போதும் உயிர்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களையும், ஊழல்களையும் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அடைக்கலம் புகுந்துள்ளார். அவருக்கு அண்மையில் ஈகுவடார் அரசு குடியுரிமை வழங்கிய நிலையில், லண்டனில் உள்ள வழக்கில், ஜாமீன் பெற்று, தப்பியது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அசாஞ்சே தரப்பு […]