டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள பீஹாரிலிருந்து 1000 கிமீ சைக்கிளில் தேசியக்கொடியுடன் வந்தடைந்த 60 வயது முதியவர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களின் விவாசிகள் இணைந்து டெல்லியிலுள்ள திக்ரி எனும் இடத்தில போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதிஅரவாக தமிழகத்திலும் பல அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தொடர்ச்சியாக […]
விளை நிலங்களில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 430 பேர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்திட மத்திய அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனால், விளை நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் மற்றும் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து […]
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், தலையாமழை கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி (49). இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.இவ்வாண்டு, மேட்டூர் அணை நிரம்பிக் காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் வந்து, கடைமடைப் பகுதிக்கும் வந்து, வயல்களில் விளைச்சல் செழிக்கும் என்று எதிர்பார்த்து கூடுதலாக 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தை ஆரம்பித்தார். இதற்காக நிறைய கடன் வாங்கினார். காவிரி நீரெல்லாம், கடலுக்குச் சென்று பாய்ந்ததே தவிர, […]
மத்திய மோடி அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து பயன் பெரும் வகையில் 22 விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை உயர்த்தப்படும் என்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழகியுள்ளது. இதில் விவசாய விளைபொருள்களான நெல், கோதுமை, சிறு தானியங்கள் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு உயர்த்தப்பட்ட குறைந்த பட்ச ஆதாரவிலை அனைவருக்கும் கிடைக்கும். இந்த புதிய திட்டத்தினால் மத்திய அரசுக்கு, கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. […]
திருவாரூர் மாவட்டத்தில் ஆறு களில் நீர்வரத்து குறைந்து விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லாத தால் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பி சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணி நடைபெற்றுள்ளது. தெளிப்பு மற்றும் நடவு செய்து 30 நாட்களே ஆன பயிர்களே பெருமளவில் உள்ளன. அண்மையில் கேரளா, கர்நாடகா பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அதிக அளவு நீர்வரத்து […]
போடி அருகே சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைந்து உள்ளது… தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துபட்டி, இராசிங்காபுரம், சங்கராபுரம், அம்மாபட்டி போன்ற கிராமங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் எப்பவும் டாப் தான்.ஆனால் தற்போது விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். அந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சி கூடுதல் செலவு இவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் […]