சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே (73) தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவருக்கு குறுகிய கால பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நேற்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, இலங்கையின் சுதந்திர வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பல மாதங்களாக நீடித்த போராட்டங்களைத் தொடர்ந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஜூலை 14 […]
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்தார்.மேலும் அவர் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது தேவஸ்தான அதிகாரிகள் ராஜபக்சே_வுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்சே சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது என்றும் , இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவாதம் குறித்து சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.