திமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ஜி.சம்பத் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், 21 ஆண்டுகளாக கட்சியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. என் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இதுகுறித்துச் சொல்லப்படவில்லை என குற்றசாட்டினார். மேலும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை குறித்து விமர்சித்து வருகின்றனர். இதனால் என் சுயமரியாதையைக் […]