முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார். முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ரூ.200 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மக்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சேவூர் கிராம மக்கள் கையெழுத்திட்டு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016-21 வரை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி 1100% மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலும் சேவூர் […]
வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருத்து. விழுப்புரம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சமூக நீதி என்று கூறுகின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறா அல்லது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறாரா என்று தெரியவில்லை. சமீபத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 2 முக்கிய பகுதி […]
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எக்காலத்திலும் ஏற்கமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தங்களை எதிர்ப்பை தெரிவித்து கண்டங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அமித் ஷாவின் பேச்சு நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் உள்ளே நுழைய விடமாட்டோம் என அதிமுக முன்னாள் […]
நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தல். நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முன்ஜாமீன் மனு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்திய நிலையில், ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியா, […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு. ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை நில அபகரிப்பு செய்யப்பட்ட மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 6 பிரிவில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு […]
சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான 2வது வழக்கில் ஜாமின் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சென்னை, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில், சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தகவல். திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜெயக்குமார் மீது 66 (இ) தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தரப்பில் […]
பள்ளிகள் திறப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாக இருந்ததையடுத்து, இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது செப்.6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் கல்வித்துறை […]