முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ),முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக,பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில்: “எங்கள் முன்னாள் அல்லது தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.பல ஆண்டுகளாக நடுவர்கள் அளித்த பங்களிப்பை BCCI மதிக்கிறது.அந்தவகையில்,அவர்களின் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது அதன் ஒரு படியாகும். அதன்படி,முன்னாள் கிரிக்கெட் […]