ஜெர்சி எண்ணாக 7 நம்பரை தேர்ந்தெடுத்ததில் மூடநம்பிக்கை இல்லை என முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தொடங்கி, ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக விளையாடுவது வரை டோனியின் ஜெர்சி எண் ஏழாக உள்ளது. இந்த 7-ஆம் நம்பர் தோனிக்கு ரசியானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்த ரசிகர்களுடனான மெய்நிகர் உரையாடலில் கலந்துகொண்டார் தோனி. அப்போது, ரசிகர்களுடனான உரையாடலின்போது தான் ஏழாவது மாதம் (ஜூலை) 7-ஆம் தேதி பிறந்ததால், […]