சென்னை:ஊழல் ஒழிப்பைத் தனது நெஞ்சில் சுமந்து,நேர்மையோடு நியாயத்தை நிலைநாட்டிய காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம்ம நாயுடு. இவருக்கு வயது 83. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை பெரவள்ளுரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில்,அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் […]