சென்னை:முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில்,இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம் ராஜன் அவர்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் தலைமையில் ஐவர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை தமிழக அரசு முன்னதாக அமைத்தது. இந்நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்திய […]