அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு. கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ரூ.110 கோடியே 93 […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் அதிமுகவின் ஒற்றுமைக்கு,தானே காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் முறைகேடாக டெண்டர்களை ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ். பாரதியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசும் வழக்கு தொடர்ந்தனர். இதனால்,முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.அவ்வாறு நடைபெற்ற சோதனையில் ரூ13 லட்சம் […]
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில்,எதிர்க்கட்சியான அதிமுக […]
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது நண்பர்களது வீடுகளில் புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கோவையில் 42, சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. […]
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது நெருக்கமானவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் அளித்ததன்மூலம் ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக FIR இல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. வழக்குப்பதிவு: இதனைத் தொடர்ந்து,திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி […]