ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 97) முதுமை காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கணக்காளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி […]
அதிமுக தலையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சமயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]
மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைத்து செல்லப்படுகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களால் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்படுகிறார். இதனிடையே, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், […]
சென்னை:திமுக மூத்த தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான ஆற்காடு என்.வீராசாமி அவர்கள்,திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இடுப்பு எழும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையில், வீட்டில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவர் திராவிடக் கொள்கையில் […]
தமிழ்நாடு காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.3 கோடி பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. கர்நாடகாவின் ஹசனில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக […]
முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஓமைக்ரான் மற்றும் கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சி அம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம். கொரோனா பரவலை முன்பு அதிமுக அரசு எப்படி […]
அதிமுக கிளை கழகத்தை கட்டமைக்காவிட்டால் வெற்றி கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை. விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டுகளும், எம்பி தேர்தலுக்கு 2 ஆண்டுகளும் அவகாசம் உள்ள நிலையில், அதிமுக கிளை கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும். அப்படி அதிமுக கிளை கழகங்களை சரியாக கட்டமைக்காவிட்டால் ரூ.50 கோடி செலவழித்தாலும் ஒரு இடம் கூட வெற்றி […]
கொரோனாவால் இலங்கையின் முன்னாள் மந்திரி மங்கல சமரவீரா இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மங்கல சமரவீரா(65) இன்று கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் கொழும்புவில் உள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடுமையான கொரோனா தொற்று காரணமாக இன்று அவர் உயிரிழந்துள்ளார். மங்கல சமரவீரா கடந்த 2005 முதல் 2007 மற்றும் […]