சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் சனேஷ் ராம் ரதியா கொரோனா தொற்று காரணமாக இன்று காலை காலமானார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சருமான சனேஷ் ராம் ரதியா உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை அன்று ராய்கரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார். […]