#Breaking:பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்…!
பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆண்டு திண்டுக்கல்லில்(வேடசந்தூரில்) நடந்த கூட்டமொன்றில் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும்,அவர்களது வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக,விருதுநகரைச் சேர்ந்த ஒருவரால் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து,புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு […]