தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கின்றது என சுவரொட்டி ஒட்டிய முன்னாள் அமைச்சர். வரும் 24-ஆம் தேதி மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி, ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா சுவரொட்டி ஒட்டியுள்ளார். அந்த சுவரொட்டியில், ‘தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கின்றது. நாங்கள் பதறி துடிக்கின்றோம். காப்பாற்றுங்கள்.’ என எழுதப்பட்டுள்ளது.