உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை. ரஷ்யா – உக்ரைன் இடையே இடைவிடாத போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்கள் மூன்றாவது விமானத்தில் இன்று காலை மும்பை வந்தனர். ருமேனியாவில் இருந்து […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் கடிதம். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இன்று அதிகாலையில் ரஷ்யா, உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை உடனடி கவனத்தை ஈர்க்க விழைவதாகவும். […]
கொரோனா தடுப்பூசிகளை இந்தியா எப்போது ஏற்றுமதி செய்யும் என வெளியுறவு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அடுத்த சில வாரங்களுக்குள் நாட்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து அரசாங்கத்திற்கு அதிக தெளிவு இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர் இன்று தெரிவித்தார். ஒரு நிகழ்வில், வெளிநாட்டு மக்களுக்கு அவர்களின் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பான கவலைகளை இந்தியா புரிந்து கொண்டதாக கூறினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகள் மற்றும் பொதுவான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கொரோனா […]