பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், இன்று பிற்பகல் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். இப்போது எனக்கு கொரோனா சோதனை செய்தேன் அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் அருளால், நான் பலமாகவும், ஆற்றலுடன் இருப்பதாக உணர்கிறேன். வீட்டிலிருந்து எனது கடமைகளை நான் தொடர்ந்து செய்வேன்” […]