விதிகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்று அதிமுகவின் வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த உத்தரவிடக்கோரி அதிமுக வழக்கு தொடுத்திருந்தது.