புதுச்சேரி மற்றும் காரைக்காலில் , 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இது வருகிற 24ம் தேதி வரை நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 14,962 மாணவர்கள்தேர்வு எழுதுகின்றனர். மேலும் புதுச்சேரியில் 32 மையங்களிலும் , காரைக்காலில் 9 மையங்களிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.