சென்னை: தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று மலர்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, இதில் அரிய வகை மரங்களும் உள்ளன. செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த […]