தெலுங்கானா : கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள காகஸ்நகர் மண்டலத்தில் உள்ள அந்தேவெல்லி என்ற இடத்தில் பெத்தவாகு ஆற்றங்கரையில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் ஆண்டவெல்லியில் உள்ள நூற்றுக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு கால்நடைகளை இழுத்து சென்றது, இருந்தாலும் கால்நடைகள் பாதுகாப்பாக கரைக்கு ஒதுங்கியது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், ஆற்றை கடக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏராளமான கால்நடைகள் ஆற்றில் […]
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் வயலில் சிக்கி தவித்த 12 பேரை இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே பொது மக்கள் பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் என அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அது மட்டுமின்றி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் போக்குவரத்து […]
மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மும்பை மாநகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். தொடர் கனமழையால் மும்பையில் உள்ள தனியார் […]
மேகலயாவில் உள்ள சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 15 பேரை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேகலயா மாநிலத்தில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தில் இருக்கும் லைத்தின் ஆற்றினில் சென்ற மாதம் 13-ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் அங்கு இருக்கும் சுரங்கம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்தது.இதனால் சுரங்கத்திற்குள் வேலைசெய்து கொண்டு இருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.இது வரை சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த 5 தொழிலாளர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் […]