திண்டுக்கல் : அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குதிரையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெல்ல அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் பழனி வட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைந்துள்ள குதிரை அணியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அங்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு […]
சென்னை: வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு 19ம் தேதி வரை, சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி, விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகிறது. […]
கர்நாடகாவில் மழை பொலிவு அதிகமாக இருக்கும் போது, கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும், அதன்படி, கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியைத் தாண்டி உள்ளது. இந்த நிலையில், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கே.ஆர்.பி. அணை நிரம்பிய நிலையில், நீர்வரத்து 1,176 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், கரையோர மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இன்று நள்ளிரவு அந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. அதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் , கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகா […]
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் காவிரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாகியுள்ள காரணத்தால் அணையில் இருந்து நீர் திறந்துவிட படுகிறது. மேலும், காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளின் நீர்பிடிக்குகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் மேட்டூர் […]