TN Govt: வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு. கடந்தாண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் வாழ்வாதாரம் […]
தமிழகம்:திமுக அரசு வெள்ள நிவாரண உதவிகளை உடனே வழங்கிட வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக 5,000/- ரூபாயை கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் […]