கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு தரப்பில் வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 அறிவிக்கப்பட்டது. அந்த வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
தென் மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்திலையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். சமீபத்தில், நடிகர் விஜய் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட […]
தென்மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதனால், பாதிகப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நினைத்த நடிகர் விஜய், நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். முதலில் நிவாரணம் வழங்குவதற்காக நடிகர் விஜய் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் வந்ததால், பாதுகாப்புக்கு நின்றிருந்தவர் திடீரென மண்டபத்தின் கதவை மூட, அது எதிர்பாராத விதமாக நடிகர் விஜயின் முதுகு பகுதியை தாக்கி கீழே தடுக்கி விழ பார்த்தார். […]
தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் முதல் இதுவரை இல்லாத வரலாறு காணாத அதி கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதி கனமழையால் ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை, வெள்ள பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் தொடர் […]
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் வந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் சங்கிலி, கோல்ஹாபூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடபட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் பலர் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெள்ளத்தில் இருந்து தங்களை மீட்ட பாதுகாப்பு படையினரின் காலை ஒரு […]