கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் […]