வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இவை வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றும்,நாளையும் அதிக மழை: இதனைத் தொடர்ந்து,அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,இன்றும்,நாளையும் அந்தமான் நிகோபார் பகுதிகளில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,அதிக கனமழை […]