தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். வார இறுதி நாட்கள், பொங்கல் பண்டிகை என தொடர் விடுமுறை என்பதால், வெளியூரில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் தங்கள் சொந்த […]
கடந்த 2016ம் ஆண்டு வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் An-32 (K-2743) விமானம், கடந்த 2016 ஜூலை 22ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு பணிக்காக சென்றபோது காணாமல் போனது. அதாவது, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் […]
அமெரிக்க விமானத்தில் 37000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ஒரு பெண் பக்கவாட்டு கதவை திறக்க முயற்சித்துள்ளது. அமெரிக்காவின், ஹூஸ்டன்-கொலம்பஸ் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் அவரது இருக்கைக்கு பக்கவாட்டு கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்குள்ள பணியாட்களால் அப்பெண் தடுத்த நிறுத்தப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். ஹூஸ்டன்-கொலம்பஸ் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானமானது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, லோம் அக்பெக்னினோ என்ற […]
டெல்லியில் இருந்து குஜராத் சென்ற உள்ளூர் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணாமாக ஜெய்ப்பூரில் தரையிறங்கி உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் இருந்து வெளிநாடு பரந்த தனியார் விமானம், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்போம். தற்போது அதே போல வேறு ஒரு விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் டெல்லியில் இருந்து குஜராஜ் மாநிலம் வடோதரா வுக்கு பறந்தது. ஆனால், அந்த விமானத்தின் இன்ஜினில் சிறு அதிர்வு ஏற்பட்ட […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்து,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,அடுத்த சில மணிநேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து,மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை […]
ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி,நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே,உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பல்வேறு […]
உக்ரைனில் இருந்து 249 இந்தியர்கள் 5-வது விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த சூழலில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.அந்த வகையில்,உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக […]
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் பரவிவரும் நிலையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் பல புதிய வழிகாட்டு நெறிமுறையை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளி மாநில விமான பயணிகளுக்கு இ- பாஸ் கட்டாயம் எனவும் உள்நாட்டு பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் & கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் இருந்து வரும் பயணிகள் முழு தடுப்பு சான்றிதழ் […]
Omicron அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமானங்கள் டிசம்பர் 15 முதல் தொடங்கப்படாது என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இது குறித்து டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கும். கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் வெளிப்படுவதைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. […]
தூத்துக்குடி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஓன்று தரை இறங்க முடியாததால் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. கனமழை காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஓன்று தரை இறங்க முடியாததால் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. திருப்பித் திருப்பி விடப்பட்ட தனியார் விமானம் பத்திரமாக திருச்சியில் தரையிறங்கியது. திருச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானத்தில் சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டார்.
சென்னை:சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுடன் தற்காலிக விமான சேவைகளை வழங்குவதற்கு,தற்காலிக ‘விமானப் போக்குவரத்து’ ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கொரோனா கால “விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்” உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி,மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,முதல்வர் கூறியுள்ளதாவது: “சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கொரோனா கால விமானப் […]
டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் குளம் போன்று தேங்கியுள்ள நேரில் சிறுவர்கள் நீந்தி விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் அதிகாலை முதல் பெய்து வரும் கன மழையால்,இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும்,விமான நிலையம் முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமான சேவைகள் முடங்கியது குறித்து டெல்லி சர்வதேச விமான நிலையம் கூறுகையில்:”நான்கு உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு […]
இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகாட் பிராங்க்ஃபர்ட்டில் இருந்து டோக்கியோவிற்கு செல்லும் விமானத்தை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரும், இந்தியாவின் மிகப்பெரிய பதக்க நம்பிக்கை வீராங்கனைகளில் ஒருவருமான வினேஷ் போகட்,ஒலிம்பிக் விளையாட்டுக்கு முன்னதாக தனது பயிற்சியாளர் வோலர் அகோஸுடன் ஹங்கேரியில் பயிற்சி பெற்று வருகிறார்.நேற்று இரவு டோக்கியோவை அடைய இருந்தார்.ஆனால் டோக்கியோவுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு […]
அமீரகத்தில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் ஆனது பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டை பாதுகாக்க ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் பிற நாடுகளிலிருந்து வரும் விமான போக்குவரத்து […]
கனடாவில், ஜூலை 21-ம் தேதி வரை இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 21 வரை தடை நீட்டிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து வரும் நிலையில், தற்போது ஒவ்வொரு நாட்டிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் விமான போக்குவரத்துக்கு […]
ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 42% உயர்வு. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த கொரோனா பாதிப்பு பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். அந்த வகையில் விமானப் போக்குவரத்துத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிய […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக 14 நாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள தடை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரக அரசு, கொரோனா பரவல் காரணமாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்லத் தடை விதித்தும், இந்த நாடுகளில் இருந்து […]
கொரோனா காரணமாக ஜூன் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 31 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு அனுமதித்துள்ள விமான போக்குவரத்து தவிர மற்ற சர்வதேச விமானங்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை தடை விதித்து மத்திய […]
மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானத்தில், பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் மட்டும் பயணித்துள்ளார். மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானம் ஒன்று ஒற்றை பயணியுடன் பயணித்துள்ளது. அந்த விமானத்தில் பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் பயணித்துள்ளா.ர் இவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய பயணம் கட்டணமாக 18 ஆயிரம் மட்டுமே […]
விமானத்தில் நடந்த திருமணத்தில், தனி நபர் இடைவெளியை பின்பற்றத்தது பற்றி புகரளிக்க விமான நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் மகன் ராகேஷ் மற்றும் மதுரையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் தீச்சனா இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவருக்கும் வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் திட்டமிட்ட நிலையில், மதுரையிலிருந்து – தூத்துக்குடி செல்ல தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு […]