இன்று முதல் இந்திய விமானங்களுக்கான தடையை நீக்கி கனடா அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் ஒவ்வொரு நாடும் தங்களது மக்களை தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி பல நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கனடா அரசு, இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உருவான ஏப்ரல் மாதத்திலிருந்து இந்திய பயணிகள் விமான சேவையை தடை […]