புதுச்சேரியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என புதுச்சேரி நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும்,இந்த பேனர்களை அகற்றியது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே,கடந்த மாதம் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து விழுந்து 70 […]